காணொளி: டெல்லியை நினைவு கூர்ந்த ஸோஹ்ரான் மம்தானி
காணொளி: டெல்லியை நினைவு கூர்ந்த ஸோஹ்ரான் மம்தானி
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஸோஹ்ரான் மம்தானி வியாழக்கிழமை (ஜனவரி 1) நியூ யார்க் நகர மேயராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சி ஓல்ட் சிட்டி ஹாலில் நடந்தது.
பின்னர் பேசிய அவர், டெல்லியை நினைவு கூர்ந்தார். "இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்த, என்னை வளர்த்த என் பெற்றோருக்கு நன்றி. மேலும் இந்த நகரத்திற்கு என்னை கொண்டு வந்ததற்கு நன்றி."
"என் குடும்பத்திற்கும் நன்றி. கம்பாலாவிலிருந்து டெல்லி வரை. என் சிறந்த நண்பராக இருக்கும் என் மனைவி ராமாவுக்கும் நன்றி. அன்றாட விஷயங்களில் உள்ள அழகை எப்போதும் எனக்குக் காட்டியதற்காக நன்றி. முக்கியமாக, நியூ யார்க் மக்களுக்கு நன்றி" என அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



