ஒடிசாவில் செயற்கையாக அடைகாத்து குஞ்சு பொறித்த மலைப்பாம்புகள்

காணொளிக் குறிப்பு, மலைப்பாம்பின் முட்டைகளை மீட்ட வனத்துறை
ஒடிசாவில் செயற்கையாக அடைகாத்து குஞ்சு பொறித்த மலைப்பாம்புகள்

ஒடிஷாவின் டீங்கானால் நகரில் வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு ஒன்றை அதன் முட்டைகளோடு மீட்டனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட பாம்பு மற்றும் அதன் முட்டைகளை காட்டுக்குள் விடப்பட்டது.

இதன் பின்னர் பாம்பு உதவிமையத்தில் இருந்து 3 பேர் கொண்ட குழு பாம்பு விடப்பட்ட இடத்தைச் சென்று பார்த்தபோது அங்கு பாம்பு இல்லை.

முட்டைகள் மட்டும் இலைகள் மற்றும் புற்கள் மூலம் மூடப்பட்டிருந்ததாகவும் சில முட்டைகள் உடைந்திருந்ததாகவும் பாம்பு உதவிமையத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து, டீங்கானால் வனத்துறை அலுவலகத்தில் செயற்கை அடைகாத்தல் முறை மூலம் முட்டைகள் அடைகாக்கப்பட்டன. 55 நாட்கள் கழித்து 14 முட்டைகளும் குஞ்சு பொறித்தன. 3 நாட்களுக்குப் பிறகு மலைப்பாம்பு குட்டிகள் காட்டில் விடப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு