வீடியோ: வேன் மீது மோதிய ரயில் - காயமின்றி தப்பிய ஓட்டுநர்

காணொளிக் குறிப்பு, வேன் மீது மோதிய ரயில்: காயமின்றி தப்பிய ஓட்டுநர்
வீடியோ: வேன் மீது மோதிய ரயில் - காயமின்றி தப்பிய ஓட்டுநர்

போலந்தில் கிராகவ் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் ரயில்வே சிக்னலில் சிக்கியது. வேன் கடப்பதற்கு முன்பாகவே சிக்னல் கதவுகள் மூடியதால் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தார் ஓட்டுநர்.

இந்த நிலையில் சில வினாடிகளில் வேகமாக வந்த ரயில் வாகனத்தின் பின்புறத்தை தாக்கியது. இதில் எதிரே இருந்த கம்பத்தின் மீது மோதி வேன் சிதறியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் தப்பினார். அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு