காணொளி: இலங்கையில் தென்னை மர உச்சியில் ஏறி உயிர் பிழைத்தவரின் பேட்டி

காணொளிக் குறிப்பு, இலங்கையில் தென்னை மரத்தில் ஏறி உயிர் பிழைத்தவரின் பேட்டி
காணொளி: இலங்கையில் தென்னை மர உச்சியில் ஏறி உயிர் பிழைத்தவரின் பேட்டி

இலங்கையில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் பல காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதில் ஒன்றுதான் இது.

கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நடுவே தென்னை மரத்தின் உச்சியில் இருந்த நபர் ஒருவர் உயிரோடு மீட்கப்பட்ட காட்சி. அநுராதபுரம் அவுகண பகுதியிலுள்ள சம்ஷூதீன் என்பவர்தான் அவர்.

பிபிசி தமிழ் அவரை தொடர்புகொண்டு அவர் நம்பிக்கையோடு உதவிக்காக காத்திருந்த தருணம் பற்றி கேட்டது. விவசாயத்தில் ஈடுபடும் சம்ஷூதீனின் அனைத்து விளை நிலங்களும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.

அவரது மாடுகள் வெள்ளத்தில் இறந்துவிட்டன. இருந்தாலும், எப்படி நம்பிக்கையோடு உயிர்பிழைத்தாரோ அதே போல இந்த நிலையில் இருந்து தான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையோடு பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியை அவர் நிறைவு செய்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு