கத்தார் - இந்தியா ரூ. 6.5 லட்சம் கோடி எரிவாயு ஒப்பந்தம்: எவ்வளவு லாபகரமானது?

காணொளிக் குறிப்பு, கத்தாருடன் ரூ.6.5 லட்சம் கோடிக்கு எரிவாயு ஒப்பந்தம் - இந்தியாவுக்கு எவ்வளவு லாபம்?
கத்தார் - இந்தியா ரூ. 6.5 லட்சம் கோடி எரிவாயு ஒப்பந்தம்: எவ்வளவு லாபகரமானது?

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது.

அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்).

இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

இந்தப் புதிய ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 50,000 கோடி இந்திய ரூபாயைச் சேமிக்க வழிவகுக்கும்.

எப்படி தெரியுமா?

கத்தாருடன் ரூ.6.5 லட்சம் கோடிக்கு எரிவாயு ஒப்பந்தம் - இந்தியாவுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?

பட மூலாதாரம், @HARDEEPSPURI

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)