லிபியாவில் புயல் ஓய்ந்தும் ஓயாத சோகம் - 11,300 பேர் பலி, 10,000 பேர் எங்கே?
லிபியாவில் புயல் ஓய்ந்து ஒரு வார காலத்திற்கும் மேலாக ஆன பிறகும் உடல்களை தேடும் பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும் ஐநாவின் ஒன்பது முகமைமகள் உதவிக் கரம் நீட்டி வருகின்றன என ஐநா தெரிவித்துள்ளது. 15 ஆயிரம் மக்களுக்கு மூன்று மாதங்கள் தேவையான மருத்துவ கிட்களும் ஐநா வால் வழங்கப்பட்டுள்ளது.
லிபியாவில் டேனியல் என்ற புயல் ஏற்பட்டு இரு அனைகள் உடைந்ததில் டெர்னா என்ற நகரமே மொத்தமாக சிதைந்துவிட்டது. இந்த வெள்ளத்தால் இதுவரை 11 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உயிரிழந்தோரை மொத்தமாக புதைக்கும் அவலமும் அங்கு நடந்தேறியுள்ளது. அவ்வாறு 1000 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



