இன்ஸ்டாகிராமில் சாதிப்பெருமை பேசும் பெண்கள் - இந்தப் புதிய ட்ரெண்ட் எப்படி வளர்கிறது?

காணொளிக் குறிப்பு, இன்ஸ்டாகிராம் பெண்கள் தங்களின் அடையாளம் குறித்து அவர்கள் அனைவருமே ஒருமித்த பெருமையையே பகிர்ந்துகொள்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் சாதிப்பெருமை பேசும் பெண்கள் - இந்தப் புதிய ட்ரெண்ட் எப்படி வளர்கிறது?

இந்துவாக இருப்பது என்றால் என்ன? இன்றைய காலகட்டத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? இந்துவாக இருப்பது என்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா?

இக்கேள்விகளை எதிர்கொள்கிறது பிபிசியின் இந்தத் தொடர். அதன் இரண்டாம் பாகம் இது.

சாதி, மதம் குறித்த விவாதங்கள் தொலைக்காட்சி அரங்குகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் இருந்து தற்போது சமூக ஊடக தளங்களுக்கு மாறிவிட்டன.

சில பெண்கள் தங்களின் சாதி மத அடையாளம், அரசியல் புரிதல் மற்றும் அவற்றின் பெருமைகள் குறித்து இன்ஸ்டாகிராமில் பேசுகின்றனர்.

இந்துவாக இருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா? தங்களின் அடையாளம் குறித்து அவர்கள் அனைவருமே ஒருமித்த பெருமையையே பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், அவர்கள் கனவு காணும் இந்தியா வேறு விதமானது.

காணொளி: திவ்யா ஆர்யா மற்றும் பிரேம் பூமிநாதன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)