உத்தராகண்டில் கிராமத்தையே புரட்டிப்போட்ட வெள்ளம் - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு

காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட்
உத்தராகண்டில் கிராமத்தையே புரட்டிப்போட்ட வெள்ளம் - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு

உத்தராகண்டில் மெக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். அடித்துச்செல்லப்பட்ட வீடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாராலி கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் மழை கொட்டித்தீர்த்ததால், கீர் கங்கா (Kheer Ganga)-ல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தனக்கு கிடைத்த முதற்கட்ட தகவல்களின்படி 4 பேர் உயிரிழந்ததாகவும் சில சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் ஆர்யா கூறியுள்ளார்.

ஆனால், பெருஞ்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

கங்கோதிரிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் பல ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் அமைந்துள்ளன. கட்டடங்களை வெள்ளம் அடித்துச் செல்வதை இந்த காணொளியில் காண முடிகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு