பிரேசில்: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள்
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில், 'கரிம்போஸ்' எனப்படும் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து தங்கம் தோண்டி எடுக்கப்படுகிறது.
பிரேசிலில், கடந்த பத்தாண்டுகளில் இந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இது பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கச் சுரங்கங்களை நோக்கி ஈர்த்துள்ளது. ஆனால், இதனால் பெண்கள் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
பிரேசில் அரசின் நடவடிக்கைகளால் சட்டவிரோத சுரங்கச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், அதிகரிக்கும் தங்கத்தின் மதிப்பு, தொடர்ந்து ஆயிரக்கணக்கானோரை இங்கு வரவைக்கிறது.
இதனால் பெண்கள் மீதான சுரண்டலும் தொடர்கிறது என ஐநா கூறுகிறது. எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாருக்கும் தெரியாது.
முழு விவரம் காணொளியில்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



