ஹிரோஷிமா நினைவு தினம் - அமைதியாக நடந்த பிரார்த்தனை

காணொளிக் குறிப்பு, ஹிரோஷிமா நினைவு தினம் - அமைதியாக நடந்த பிரார்த்தனை
ஹிரோஷிமா நினைவு தினம் - அமைதியாக நடந்த பிரார்த்தனை

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் அமெரிக்கா அணு குண்டு வீசி 80 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் நிகழ்வாக, ஆகஸ்ட் 6-ம் தேதி காலை ஒரு அமைதியான பிரார்த்தனை நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் இரண்டு அணு குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல்களில் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். சிலர் உடனடி வெடிப்பால், மற்றவர்கள் கதிர்வீச்சு நோய்கள் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு