‘பசங்க மட்டும்தான் வீடியோ கேம் விளையாடணுமா?’ – சவால் விடும் இளம்பெண் – காணொளி
‘பசங்க மட்டும்தான் வீடியோ கேம் விளையாடணுமா?’ – சவால் விடும் இளம்பெண் – காணொளி
கொரோனா காலத்தில் மும்பையிலிருக்கும் தன் வீட்டிலிருந்தே கல்லூரியின் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அந்த அயற்சி தீர, ஆன்லைன் கேம்கள் விளையாடத் துவங்கினார் 22 வயதான பாயல் தாரே.
விளையாடும் போது அந்த கேம்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசி அரட்டை அடிப்பது அவரது வழக்கம். அதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதனை யூட்யூபில் பகிர அவரை ஊக்குவித்தனர்.
அப்படிப் பகிரத்துவங்கிய பாயல் தாரே, படிப்படியாக ஆன்லைன் கேமிங் குழுக்களில் முன்னேறி, இன்று 31 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ஒரு ஆன்லைன் கேமிங் யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். ஆன்லைன் கேமிங் இவரது முழுநேரத் தொழிலாகவே மாறிவிட்டது.
இந்த இளம்பெண் தனது கதையைப் பகிர்ந்துகொள்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



