பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் - மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

காணொளிக் குறிப்பு, மாலுக்கு படிக்கச்செல்லும் மாணவர்கள் - மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?
பள்ளிக்கூடமாக மாறிய வணிக வளாகம் - மாணவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவின் வெர்மோண்டில் உள்ள இந்த பள்ளிக்கூடம் சற்று வித்தியாசமானது. பெர்லிங்டன் என்று அழைக்கப்படும் இந்த பள்ளி உள்ள இடம் முன்பு வணிக வளாகமாக இருந்தது.

தற்போது மாணவர்கள் நகரும் படிக்கட்டுகள் வழியாக தங்களின் வகுப்புகளுக்கு செல்கின்றனர். முன்பு கோப்பைகள் இருந்த இடங்களில் தற்போது புத்தகங்கள் உள்ளன. சில பிராண்ட்களின் பெயர்கள் தற்போதும் சுவர்களில் காணப்படுகின்றன.

பள்ளியின் பழைய கட்டிடத்தில் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது இந்த வணிக வளாகம் காலியாக இருந்தது. 10 நாட்கள் புனரமைப்புக்கும் பின்னர் பள்ளி வணிக வளாகமாக இருந்த இடத்துக்கு மாற்றப்பட்டது.

நகரும் படிக்கட்டுகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: