தேவாலயத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் நடந்தேறிய திருமணம்

காணொளிக் குறிப்பு, பிலிப்பின்ஸ் மக்கள் வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம் செய்வது ஏன்?
தேவாலயத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் நடந்தேறிய திருமணம்

மணிலாவில் வெள்ளத்தில் மூழ்கிய தேவாலயத்தில் பிலிப்பின்ஸ் தம்பதி திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஆனால் உண்மையில், இது நடப்பது இது முதல் முறை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே சமயத்தில் இதே தேவாலயத்தில் ஒரு மணமக்கள் திருமணம் செய்துகொண்டனர். அதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு மணிலாவின் வடக்குப் பகுதியில் உள்ள புலாகன் மாகாணத்தில் உள்ள வெள்ளம் சூழ்ந்திருந்த தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுபோன்ற திருமணங்கள் வெறும் மன உறுதியை வெளிப்படுத்தும் சம்பவம் மட்டுமல்ல. லட்சக் கணக்கான மக்களை தொடர்ந்து துயரில் ஆழ்த்தும் வெள்ளம், கழிவுநீர் அமைப்புகள், மோசமான நகர்ப்புற திட்டமிடல், அடிக்கடி ஏற்படும் வானியல் மாற்றங்கள் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தை எடுத்துரைக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு