கிருஷ்ணகிரியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கிருஷ்ணகிரியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கிருஷ்ணகிரியில் இன்று மாலை (டிசம்பர் 2) இரு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், ஓசூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், பேருந்து நடத்துனர் சீனிவாசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. பெண் பயணி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



