தென் கொரிய அதிபர் பதவி விலகக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்

காணொளிக் குறிப்பு, தென் கொரிய அதிபர்
தென் கொரிய அதிபர் பதவி விலகக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதல் முறையாக தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அறிவித்த அதிபர், நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

தென் கொரியாவில் அவசர நிலையை பிரகடனப் படுத்திய அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் ராணுவ ஆட்சியை நேற்று அறிவித்தார். இதனை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் அழுத்தத்திற்குப் பிறகு ராணுவச் சட்ட ஆணையை நேற்று இரவு திரும்பப் பெற்றார்.

தற்போது, அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)