வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் 'ஏழைகளின் வங்கியாளர்' - யார் இந்த யூனுஸ்? - காணொளி

காணொளிக் குறிப்பு, வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் 'ஏழைகளின் வங்கியாளர்'- யார் இந்த யூனுஸ்?
வங்கதேசத்தை வழிநடத்தப் போகும் 'ஏழைகளின் வங்கியாளர்' - யார் இந்த யூனுஸ்? - காணொளி

வங்கத்தேசத்தின் இடைக்கால தலைவராக நோபல் பரிசு வென்றவரும் ஏழைகளின் வங்கியாளர் என்று அழைக்கப்படுபவருமான முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.

தலைநகர் தாக்காவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் யூனுஸ் உடன் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவிபிரமாணம் ஏற்றுகொண்டனர். அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களான நஹித் இஸ்லாம், ஆசிஃப் முகமத் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறினார்.

பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ராணுவ தளபதி, இடைக்கால அரசு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். வங்கதேச போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மாணவர்கள், ராணுவம் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்க மறுத்து, பேராசிரியர் யூனுஸ் இடைக்கால அரசை வழிநடத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர்.

அதிபர் முகமது ஷஹாபுதீன், ராணுவத் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இடைக்கால அரசின் தலைவராக 84 வயதான முகம்மது யூனுஸை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக யூனுஸ் கூறும்போது, "இவ்வளவு தியாகம் செய்த மாணவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசை வழிநடத்துமாறு என்னைக் கோரும்போது நான் எப்படி மறுக்க முடியும்," எனக் குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த முகமது யூனுஸ்?

முகம்மது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)