5 கி.மீ தூரத்துக்கு நகர்த்தப்படும் தேவாலயம்
ஸ்வீடன் நாட்டில் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்று முழுவதுமாக ஐந்து கி.மீ தூரம் தள்ளி வைக்கப்பட உள்ளது. தேவாலயம் அமைந்திருக்கும் நிலம் ஸ்திரத்தன்மை இழந்து வருவதால் தேவாலயத்தை வேறு இடத்துக்கு நகர்த்த வேண்டியுள்ளது.
ஸ்வீடனின் வடக்கு பகுதியில் உள்ள கிருனா என்ற இடத்தில் உள்ள செம்மரத்தாலான இந்த தேவாலயம் 1912-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த தேவாலயத்தை நகர்த்துவதற்கு முன்பாக, அந்த தேவாலயம் முழுவதும் சக்கரங்கள் கொண்ட ஒரு நகரும் நடைமேடையின் மீது ஏற்றப்பட்டுள்ளது.
தேவாலயத்தை அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 500 மீட்டர் நகர்த்த முடியும். தேவாலயத்தை முழுவதுமாக 5 கி.மீ நகர்த்த இரண்டு நாட்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இரும்பு தாது சுரங்கப் பணிகள் நடைபெற்று வந்த இந்த பழமையான நகரம் தற்போது நில பிளவுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



