வயநாடு: மீட்புப் பணியில் ஜிப்லைனில் துணிந்து பயணித்த செவிலியர் சபீனாவின் அனுபவம்

காணொளிக் குறிப்பு,
வயநாடு: மீட்புப் பணியில் ஜிப்லைனில் துணிந்து பயணித்த செவிலியர் சபீனாவின் அனுபவம்

இவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஷிஹாப் தங்கள் மனிதநேய அறக்கட்டளை எனும் அரசு-சாரா அமைப்பில் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகிறார்.

கடந்த ஜூலை மாத இறுதியில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, அதில் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இரு கிராமங்களுக்கும் இணைப்பு தடைபட்ட நிலையில், ஜிப்லைன் வாயிலாகப் பயணித்து பாதிக்கப்பட்ட பலருக்கும் முதலுதவி சிகிச்சைகளை வழங்கினார்.

மழை, நிலச்சரிவு போன்ற அபாய சூழல்களில் ஜிப்லைனில் பயணிப்பது எவ்வளவு கடினம் என்பதை விளக்கினார், தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த பிரதேஷ்.

வயநாட்டில் செய்த பணிகளுக்காக சபீனாவுக்கு தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தது.

தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: வில்ஃப்ரட் தாமஸ்

செய்தியாளர்: சேவியர் செல்வக்குமார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)