காணொளி: வட கொரியாவின் அடுத்த தலைவர் இவர் தானா? - இந்த சிறுமிக்கு முக்கியத்துவம் ஏன்?

காணொளிக் குறிப்பு, யார் இந்த கிம் ஜு ஏ? வட கொரிய தலைவரின் அரசியல் வாரிசா?
காணொளி: வட கொரியாவின் அடுத்த தலைவர் இவர் தானா? - இந்த சிறுமிக்கு முக்கியத்துவம் ஏன்?

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சமீபத்திய சீன பயணம் பெரியளவில் ஊடக கவனம் பெற்றது.

ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு சிறுமி தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ.

தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள், அவருடைய சரியான வயது உள்ளிட்டவை அதிகமாக பொதுவெளியில் இல்லை.

இருந்தாலும் அவரை பற்றி நமக்கு இதுவரை தெரிந்தது என்ன?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு