ஆற்றில் நீந்திய பறவைகள் நீல நிறமாக மாறிய மாயம் - என்ன நடந்தது? (காணொளி)

காணொளிக் குறிப்பு, நீர்நிலைகளில் சாயம் கொட்டியதால் நீல நிறமாக மாறிய பறவைகள்
ஆற்றில் நீந்திய பறவைகள் நீல நிறமாக மாறிய மாயம் - என்ன நடந்தது? (காணொளி)

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஆற்றில் சாயக் கரைசல் கலந்ததால் அங்கு வாழும் பறவைகள் நீலநிறமாக மாறியுள்ளன. நீல நிற சாயக் கரைசல்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஒரு கம்பத்தில் மோதியது. இதனால் அந்த சாயக் கரைசல், ஜுன்டியாய் நதியுடன் இணைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கொட்டியது.

ஜுன்டியாய் சிவில் பாதுகாப்பை சேர்ந்த கர்னல் ஜோவாவ் கூறுகையில், "அசிடிக் அமிலம் மற்றும் வினிகர் மணம் கொண்ட கரிம ரசாயனம் கலந்த இந்த சாயம் நீர்நிலையில் கலந்தது. உணவுப் பொருட்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் (சைட்ரோஃபோம்) பாலிஸ்டிரீன் வகை பெட்டிகளில் இந்த சாயம் பன்படுத்தப்படுகிறது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.