கசாப்பு கடைக்கு செல்லவிருந்த கன்றை மீட்டு ஜல்லிக்கட்டு காளையாக மாற்றிய போலீஸ்காரர்
கசாப்பு கடைக்கு செல்லவிருந்த கன்றை மீட்டு ஜல்லிக்கட்டு காளையாக மாற்றிய போலீஸ்காரர்
மதுரை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் 1998ல் இருந்து ஜல்லிக்கட்டில் காளை பிடி வீரராகக் களமிறங்கி வருகிறார். அதுமட்டுமின்றி இவரது குடும்பத்தில் முன்னோர்கள் தொடங்கி பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுக்குக் காளைகளை வளர்க்கின்றனர். தமிழ்நாடு காவலராக பணியாற்றி வரும் வினோத் ஜல்லிக்கட்டில் மிகவும் பிரபலமானவர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு விருதுநகர் காரியாபட்டி அருகே இறைச்சி கூடத்திற்கு விற்கப்பட்ட கன்றை மீட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்துள்ளார். ஒப்பந்ததாரருக்கு ரூ.3000க்கு விற்கப்பட்ட கன்றை ரூ.13 ஆயிரத்திற்கு மீட்டுள்ளார்.
அடிமாட்டுக்குச் சென்ற காளையை மீட்ட காவலர் வினோத் முறையாகப் பயிற்சி வழங்கியதைத் தொடர்ந்து, இந்தக் காளை முதன் முறையாக வாடிவாசலில் அடியெடுத்து வைக்கிறது.
தயாரிப்பு, காணொளி: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



