ஆன்லைன் கேம் விளையாடும் போதே தற்கொலை செய்து கொண்ட சிறுவன் - காணொளி

காணொளிக் குறிப்பு, ஆன்லைன் கேம் விளையாடும் போதே தற்கொலை செய்து கொண்ட சிறுவன்
ஆன்லைன் கேம் விளையாடும் போதே தற்கொலை செய்து கொண்ட சிறுவன் - காணொளி

ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போதே பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவின் புனே நகரில் நிகழ்ந்துள்ளது. ஆர்யா ஸ்ரீ ராவ் என்ற அந்த மாணவர் கடந்த சில மாதங்களாக வீடியோ கேமுக்குள் மூழ்கி இருந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். இவரிடம் சில நடத்தை மாற்றங்களையும் அவர்கள் கவனித்துள்ளனர்.

இந்த மாணவர் எந்த ஆன்லைன் கேம் விளையாடினார் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. இவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மழை காரணமாக ஜூலை 25-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அன்றைய நாள் முழுவதும் ஆர்யா கேம் விளையாடியுள்ளார். இரவு உணவை முடித்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றுள்ளார். இவரது தாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மற்றொரு குழந்தையை கவனித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது ஒரு குழந்தை காயத்துடன் குடியிருப்பு வளாகத்திற்குள் கிடப்பதாக சொசைட்டி க்ரூப்பில் அவருக்கு ‘மெசேஜ்’ வந்துள்ளது. உடனடியாக ஸ்வாதி ஆர்யா அறைக்கு செல்ல அறை உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. மற்றொரு சாவியை பயன்படுத்தி உள்ளே சென்றதாகவும், தன் மகன் அங்கு இல்லை என்றவுடன் வேகமாக கீழே சென்றதாகவும் கூறுகிறார் ஸ்வாதி. ஆர்யா அறையில் ஒரு கடிதத்தையும் போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

ஆன்லைன் கேம், மகாராஷ்டிரா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)