அசாமில் ஒரு லட்சம் பேரின் வாக்குரிமை பறிப்பு - யார் இந்த டி-வாக்காளர்கள்?
இந்திய மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அசாமில் ஏராளமானோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இவர்கள் D-voters அல்லது சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இதைப் புரிந்து கொள்ள, அசாமின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். அசாம் வங்கதேசத்துடன் கிட்டத்தட்ட 300 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அங்கே துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கவும் போர் முதலிய காரணங்களாலும் பலர் அங்கிருந்து அசாமுக்கு இடம்பெயர்ந்தனர்.
மொனீந்திர தாஸ் இப்படித்தான் 1964 இல் அசாமில் உள்ள அகதிகள் முகாமிற்கு வந்தார்.
பலருக்கும் இதேபோன்ற கதை இங்கிருக்கிறது.
இந்தப் பிரச்னையை இந்துக்களும் எதிர்கொள்கின்றனர், முஸ்லிம்களும் எதிர்கொள்கின்றனர்.
1970களின் பிற்பகுதியில், தேசியவாத குழுக்கள் அரசு சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, நாடு கடத்த வேண்டுமென கோரி போராட்டத்தைத் தொடங்கின. இது அசாம் உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. அதன்படி, 1971 வங்கதேச விடுதலைப் போருக்கு முன் இந்தியா வந்தவர்கள் இந்தியர்களாக கருதப்படுவார்கள் என்றும் மற்றவர்கள் வெளிநாட்டினர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
1997ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்குரிய இந்திய குடியுரிமை வைத்திருப்பவர்கள் என்று தாம் கருதும் நபர்களை அடையாளம் காணத் தொடங்கியது. இவர்கள் தான் தற்போது D-Voters என அறியப்படுகின்றனர்.
இங்குதான் நீண்ட அதிகார மட்ட நடைமுறைகள் மற்றும் சட்டப் பயணம் தொடங்கியது. இதில், D-Voters என குறிக்கப்பட்டவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதை வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் முன் நிரூபிக்க வேண்டியிருந்தது.
முழு விவரம் காணொளியில்....

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



