காணொளி: தேர்தல் முடிவு நாளில் அதிபர் கைது - கினி பசாவ் நாட்டில் என்ன நடந்தது?
காணொளி: தேர்தல் முடிவு நாளில் அதிபர் கைது - கினி பசாவ் நாட்டில் என்ன நடந்தது?
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடு கினி-பசாவ். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலின் முடிவுக்காக கினி-பசாவ் நாடு வியாழக்கிழமை காத்திருந்தது.
அப்போது, அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரிகள், தேர்தல் நடைமுறைகள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதிபர் எம்பாலோ தடுப்பு காவலில் இருப்பதை அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



