எல்க் மான்களின் வலசைப் பயணம் - இயற்கை அதிசயத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பும் சுவீடன்
எல்க் மான்களின் வலசைப் பயணம் - இயற்கை அதிசயத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பும் சுவீடன்
வடக்கு சுவீடனில் ஒவ்வொரு வசந்த காலத்திலும், எல்க் என்ற மான் இனம் தன்னுடைய வருடாந்திர வலசைப் பயணத்தைத் துவங்கும்.
ஆங்கெர்மென் என்ற நதியில் நீந்தி, பசுமைப் போர்த்திய புல்வெளிப் பிரதேசங்களை நோக்கிச் செல்லும் இந்த வலசையை சுவீடன் நாட்டின் அரசு ஊடகமான எஸ்.வி.டி.ப்ளே 24 மணிநேரம் மக்களுக்காக ஒளிபரப்புகிறது.
தி கிரேட் மூஸ் மைக்ரேஷன் என்ற தலைப்பில் வெளியாகி வரும் இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட இந்த நிகழ்ச்சியை 90 லட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
எல்க் மானின் அழகிய வலசை காட்சிகள், இந்த காணொளியில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



