காணொளி: பிங்க் நிறத்தில் மீட்பர் ஏசு சிலை

காணொளிக் குறிப்பு, பிங்க் நிறத்தில் இயேசு சிலை
காணொளி: பிங்க் நிறத்தில் மீட்பர் ஏசு சிலை

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் ஏசு சிலை சிலை பிங்க் நிற விளக்குகளால் ஒளிர்கிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். உலகளவில் மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2022ஆம் ஆண்டு சுமார் 23 லட்சம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 6,70,000 பேர் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வு, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு