சமூக ஊடக நேரலையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பெண் இன்ஃப்ளூயன்சர் - என்ன நடந்தது
சமூக ஊடக நேரலையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பெண் இன்ஃப்ளூயன்சர் - என்ன நடந்தது
டிக்டாக் நேரலையின் போதே 23 வயதான இன்ஃப்ளூயன்சர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மெக்சிகோவின் குவாடலஹாராவில் உள்ள தனது அழகு நிலையத்தின் ஒரு மேசையில் பொம்மையுடன் வலேரியா மார்க்கெஸ் அமர்ந்திருந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மற்றொரு நபர் அவரது கைபேசியை எடுத்து நேரலையை நிறுத்தியுள்ளார். உள்ளூர் ஊடகங்கள், பரிசு கொடுப்பது போல வந்த நபரால் அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.
நெருங்கிய உறவினரால் அவர் கொல்லப்பட்டார் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. மெக்சிகோவில் கணவர் அல்லது குடும்பத்தினரால் 10 பெண்கள் அல்லது சிறுமிகள் ஒரே நாளில் கொல்லப்படுகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



