மாலத்தீவு அதிபருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு - மோதியுடன் இன்று சந்திப்பு

காணொளிக் குறிப்பு, மாலத்தீவு அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
மாலத்தீவு அதிபருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு - மோதியுடன் இன்று சந்திப்பு

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். பிரதமர் மோதியுடன் சந்தித்துப் பேச வந்த அவருக்கு இந்தியா சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான உறவுகளில் நெருடல்கள் ஏற்பட்டு வந்தன. இந்தியா மாலத்தீவு மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற செய்தியை சொல்லும் வகையில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவிடமிருந்து விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டுவாரா என்ற எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இந்திய பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது.

கூடுதல் விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)