காணொளி: கத்தாருக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, கத்தாருக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
காணொளி: கத்தாருக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

கத்தார் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடான கத்தாரைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகள் தலையிடும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள கத்தார் வெளியுறவு அமைச்சகம் , "பாதுகாப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு" என கூறியது.

முன்னதாக , காஸா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முன்வைத்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்டார் .

கத்தாருக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? டிரம்பின் நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.