மகா கும்பமேளா கூட்ட நெரிசல் காட்சிகளை கண் முன்னே கொண்டு வரும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
சில இடங்களில் தடுப்புகளை மீறி மக்கள் சென்றதே நெரிசலுக்கு காரணம் என கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரி ஆகாங்ஷா ராணா தெரிவித்தார். எனினும், அங்கே நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் அவர் கூறினார்.
காயமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோக்களை சமூக ஊடகமாமான எக்ஸ் தளத்தில் பார்க்க முடிகிறது.
இதையடுத்து, மௌனி அமாவாசை நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் பல ஊடக தகவல்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கும்ப மேளாவில் பிபா பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். அங்குள்ள சுகாதார பணியாளர் ஒருவர் அவர் பலரது உடல்களை பார்த்ததாகவும் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
- உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?
- சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?
- 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?
- புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
உயிரிழப்புகள் குறித்து உத்தர பிரதேச அரசு இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இன்று சுமார் 3 கோடி பேர் அங்கு கூடியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சம்பவத்தை நேரில் பார்த்த டெல்லியை சேர்ந்த உமேஷ் அகர்வால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று பிபிசியிடம் விளக்கினார். "மக்கள் குளிக்க செல்லும் போது படிக்கட்டுகள் அருகில் ஏற்கெனவே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் விழ தொடங்கினர். அவர்கள் விழ தொடங்கிய போது, அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள் அவர்கள் மீது தடுக்கி விழ ஆரம்பித்தனர்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்க நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரி அகான்ஷ் ரானா செய்தியாளர்களிடம் பேசும் போது, சில இடங்களில் தடுப்புகளை உடைத்து மக்கள் உள்ளே செல்ல முயன்றுள்ளனர், இதுவே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி உத்தர பிரதேச முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து கேட்டு அறிந்தார் . காலை முதல் பிரதமர் தன்னிடம் நான்கு முறை பேசியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கும்பமேளா சம்பவம் குறித்து மக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உத்தர பிரதேச மாநில முதல்வரின் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், "கங்கை நதிக்கு செல்ல தங்களுக்கு அருகில் இருக்கும் படிகட்டுகளுக்கு சென்று குளிக்கவும். திரிவேணி சங்கமத்தை நோக்கி செல்ல வேண்டாம். அரசு நிர்வாகம் கூறியுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும், ஒத்துழைப்பு வழங்கவும். நீராடல்கள் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
கும்பமேளாவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள காவல் டி ஐ ஜி வைபவ் கிருஷ்ணா, பக்தர்கள் தங்களுக்கு கிடைக்கும் இடத்தில் வேகமாக குளித்து விட்டு புறப்பட்டு சென்று விட வேண்டும் என செவ்வாய்கிழமை மாலை அறிவுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
நதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் மக்கள் தூங்க வேண்டாம் என்றும், தங்களுக்கு அருகில் உள்ள படிக்கட்டுகளுக்கு சென்று அங்கேயே குளித்து விட்டு செல்லுமாறும் உத்தர பிரதேச காவல்துறையினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.
அந்த 3 நாட்களிலும் கூட ஜனவரி 29-ம் தேதியான இன்றைய தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கும்பமேளாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் இன்றைய தினம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












