பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த முதியோர் இல்லம் பிரபலமாவது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் உள்ள முதியோர் இல்லம் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது
பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த முதியோர் இல்லம் பிரபலமாவது ஏன்?

பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் உள்ள முதியோர் இல்லம் ஒன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. அங்குள்ள முதியோர்கள், ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரிஸ் வந்துள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்களுடன் புகைப்படங்கள் எடுக்க, ஆட்டோகிராஃப் பெற விரும்புகிறார்கள்.

இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தடகள வீரர்கள் அவர்களுடன் சிறிது நேரத்தைச் செலவிட்டு செல்கிறார்கள்.

“நாங்கள் இங்கு அன்பைப் பகிர முயற்சி செய்கிறோம். அதாவது ஒலிம்பிக் வீரர்களுக்கு அன்பைக் கொடுக்கவும், அவர்களிடமிருந்து அன்பைப் பெறவும்.” என்கிறார் முதியோர் இல்லத்தின் நிர்வாகி பாத்திமா ஸர்ரூ.

மேலும், “ஒலிம்பிக் வீரர்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பாரிஸ் வந்துள்ள வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் என்னால் காண முடிகிறது.” என்றும் கூறுகிறார் பாத்திமா.

முழு விவரம் காணொளியில்.

ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த முதியோர் இல்லம் பிரபலமாவது ஏன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)