'விஜய் தாமதமாக வந்ததே காரணம்' - கரூர் நெரிசல் பற்றி சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

காணொளிக் குறிப்பு, கரூர் கூட்ட நெரிசல்: 'விஜயின் தாமதமே காரணம்' - சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேச்சு
'விஜய் தாமதமாக வந்ததே காரணம்' - கரூர் நெரிசல் பற்றி சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் செப். 27 அன்று மதியம் 12 மணியளவில் பரப்புரை மேற்கொள்வார் என அறிவித்துவிட்டு, 7 மணிநேரம் தாமதமாகவே அங்கு வந்தார் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதுவே, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

"எங்கள் தலைவர் விஜய் தாமதமாக வரவில்லை. கரூரில் காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம் என தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா முன்னதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு