காணொளி: 'அழகிப் போட்டியில் இருந்து வெளியேறிய அழகிகள்' - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, காணொளி: 'அழகிப் போட்டியிலிருந்து வெளியேறிய அழகிகள்' - என்ன நடந்தது?
காணொளி: 'அழகிப் போட்டியில் இருந்து வெளியேறிய அழகிகள்' - என்ன நடந்தது?

மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் நாடான தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, போட்டியாளர் ஒருவரை பகிரங்கமாக திட்டியதை அடுத்து, பல போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேறினர்.

அழகிப் போட்டிக்கு முந்தைய நிகழ்வில், மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து இயக்குனர் நவத் இட்சராகிரிசில், போட்டியாளர் பாத்திமா போஷ்-ஐ, மிஸ் யூனிவர்ஸ் தொடர்பான விளம்பரத்தை சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை என்பதற்காக விமர்சித்தார்.

மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு நவத்தின் மோசமான செயல்பாட்டை கண்டித்தது. பின்னர் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு