சத்தீஸ்கரில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு,
சத்தீஸ்கரில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் - காணொளி

சத்தீஸ்கரில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை இந்துத்துவ அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

டிசம்பர் 24ஆம் தேதி ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலுக்குள் நுழைந்த சில இளைஞர்கள் அங்கு கிறிஸ்துமஸுக்காக வைக்கப்பட்டிருந்த அலங்காரங்களை சேதப்படுத்தினர்.

மேலும், அந்த வணிக வளாகத்தின் ஊழியர்களிடம் அவர்களின் சாதி மற்றும் மதம் குறித்துக் கேட்டு மிரட்டியதாக அந்த வளாகத்தின் விளம்பரத்துறை தலைவர் ஆபா குப்தா குற்றம் சாட்டினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு