விமான விபத்தால் அமேசான் காட்டிற்குள் விழுந்த 4 குழந்தைகள் 40 நாட்கள் தாக்குப்பிடித்தது எப்படி?
விமான விபத்தில் சிக்குண்டு கொலம்பியாவின் அமேசான் காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் 40 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தனை நாட்களும் அவர்கள் காட்டுக்குள் இரைதேடி உண்டு பிழைத்திருந்தனர். கொலம்பியாவின் அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, இக்குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது, ‘நாடு முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக்’ கூறியிருக்கிறார்.
மே மாதம் 1ஆம் தேதி, அவர்கள் பயணித்தச் சிறிய விமானம் காட்டின்மேல் விபத்துக்குள்ளானதில், அவர்களது தாயும், இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். காணாமல் போயிருந்த குழந்தைகளைத் தேட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதிபர் பெத்ரோ, குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை ‘அற்புத நாள்’ என்று வர்ணித்தார். மேலும், “அவர்கள் தனித்து இருந்தனர். சுயமாக அவர்கள் பல இடர்ப்பாடுகளைச் சமாளித்துப் பிழைத்ததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றனர்,” என்றார். (முழு தகவல் காணொளியில்)

பட மூலாதாரம், Reuters
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



