அயோத்தி ராமர் சிலையை மோதி பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு ஏன்? பிபிசிக்கு சங்கராச்சாரியார் பேட்டி

காணொளிக் குறிப்பு, ராமரின் சிலையை பிரதமர் நரேந்திர மோதி பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு
அயோத்தி ராமர் சிலையை மோதி பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு ஏன்? பிபிசிக்கு சங்கராச்சாரியார் பேட்டி

“ஊனமுற்றவர்களை விக்லாங் என்று அழைக்க வேண்டாம், ’திவ்யாங்’ என்று அழையுங்கள் என்று மோதி கூறுகிறார். ஆனால் இன்று இது ஒரு ’திவ்யாங்’ ( முற்றுப்பெறாத) கோவில். சகல உறுப்புகளையும் கொண்ட பெருமானை எப்படி இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்ய முடியும்?”

"பிரதமர் மோதி மத சார்பின்மை உறுதிமொழியை மூன்று முறை எடுத்துக்கொண்டுள்ளார் ... எனவே எந்த சமயப் பணியிலும் ஈடுபட நேரடி உரிமை இல்லை."

“அவர் திருமணமானவர் என்றால் மனைவியுடன் அமர வேண்டும். திருமணமான எந்த ஒரு நபரும் தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு சமய பணியிலும் ஈடுபட உரிமை இல்லை.”

“கோபுரம் மற்றும் கொடி மரம் இல்லாமல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டால், அந்த சிலை பார்ப்பதற்கு ராமரின் சிலையாகத் தோன்றும். ஆனால் அதில் அசுரன் தான் இருக்கும். அசுர சக்தி அதில் வந்து குடியேறிவிடும்”.

இந்த விஷயங்கள் அனைத்துமே ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மகராஜ் ஜனவரி 16 ஆம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியின்போது சொன்னதாகும்.

இந்த நேர்காணலில் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, குடமுழுக்கு திட்டம் குறித்து கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு முதல் முறையாக பதில்களையும் அளித்துள்ளார்.

முழு விவரத்தையும் காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)