விபத்தில் துண்டான 4 வயது சிறுவனின் கையை வெற்றிகரமாக பொருத்திய மருத்துவர்கள்
இந்த காணொளியை முதல்முறை பார்க்கும் நீங்கள், இந்த பெரும் விபத்திலிருந்து நான்கு வயதான கௌரவ் உயிர்பிழைத்ததை நம்ப மாட்டீர்கள். தற்போது அச்சிறுவன் சூரத்தில் உள்ள நியூ சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் வலது கை, நியூ சிவில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது. நேரத்தை வீணடிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்ததாலேயே இது சாத்தியமானதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த விபத்துக்குப் பிறகு கௌரவின் தாய் ஜோதி கியான் சமாதானம் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னர், மருத்துவர்கள் குழுவுக்கு நன்றி சொல்ல அவரிடம் வார்த்தைகளே இல்லை.
கௌரவ் ஆபத்திலிருந்து மீண்டுள்ளதால் அவரின் குடும்பம் நிம்மதியடைந்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



