காசா மீது அதிகாலையில் இஸ்ரேல் தாக்குதல் - 200 இலக்குகளை தாக்கியதாக அறிவிப்பு
காசா மீது அதிகாலையில் இஸ்ரேல் தாக்குதல் - 200 இலக்குகளை தாக்கியதாக அறிவிப்பு
ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலை தொடுத்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதலில் அல் ரிமால், என்ற பகுதி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று கான் யூனிஸ் என்ற பகுதியும் சமீபத்திய வான்வழித் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது.
காஸா மீது தாக்குதல் நடத்திய காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது 200 இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் வான்படை கூறுகிறது. இதுவரை குறைந்தது 700 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் தரப்பில் 900-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



