இந்தியா: முதல் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டி உருவான சுவாரஸ்ய கதை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த தேர்தலில், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது.
வாக்குகளை செலுத்துவதற்கான வாக்குப் பெட்டிகளை மும்பையில் கோத்ரேஜ் நிறுவனம் தயாரித்தது. அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்குப் பெட்டி 72 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது.
இதில் சிரமங்கள் இருந்தன. இந்த பெட்டியின் விலை அக்காலத்தில் 5 ரூபாய் தான். ஆனால், அதற்கான பூட்டுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருந்தது. அதனால், பணியாளர்களிடம் அந்த பெட்டியின் வடிவமைப்பை மாற்றுவதற்கான யோசனைகள் கேட்கப்பட்டன. இந்த பிரச்னையை தீர்க்க ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.
'தி பாம்பே க்ரானிக்கிள்' எனும் செய்தித்தாளில் வெளியான செய்தியின்படி, அச்சமயத்தில் கோத்ரேஜ் நிறுவனத்தின் விக்ரோலி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. முதல் பொதுத் தேர்தலில் 12 லட்சம் வாக்குப்பெட்டிகள் ரயில்கள் மூலம் இந்தியாவின் 23 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன.
அப்படிப் பயன்படுத்தப்பட்ட முதல் வாக்குப்பெட்டி பற்றிய காணொளி இது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



