இந்தியா குறித்த கருத்து: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அதிபர் பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு இந்தியாவில் பாகுபாடு என்பதற்கே இடமில்லை என்று மோதி பதிலளித்தார். இதற்கிடையே, பிரதமர் அமெரிக்காவில் இருக்கும்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையின் உரிமைகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசினார்.
ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியுள்ளார்.
“ஒபாமா ஆட்சியில் இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 6 நாடுகள் மீது அமெரிக்கா குண்டு வீசியுள்ளது. அப்படியிருக்கும்போது, மக்கள் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை உண்மையென்று நம்புவார்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



