மியான்மர்: ராணுவத்திற்கு எதிரான சண்டையில் முன்களத்தில் நிற்கும் பெண் ஸ்னைப்பர்கள்
மியான்மரில் உள்ள கலகக் குழு ஒன்றில் ஸ்னைப்பர் எனப்படும் தொலைதூரத்தில் இருந்து குறிவைத்து துப்பாக்கி சுடும் வீரராக உள்ளார் தேண்டார் மோ. இவர், 2021இல் ராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு வரை பல்கலைக்கழக மாணவராக இருந்தார். பின்னர், ராணுவத்திற்கு எதிராக சண்டையிடும் கலகக் குழுவில் சேர்ந்தார்.
மியான்மரில் 2011ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலம், ராணுவ ஆட்சி நீடித்தது. பின்னர் மீண்டும் 2021ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. அப்போதிருந்து, சண்டை காரணமாக, பல்லாயிரக்கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 25 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இத்தகைய கலகக் குழுக்களில் பல பெண்கள் இணைந்துள்ளனர். இதற்கு முன்னர், அவர்கள் சண்டையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



