கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் மண்ணுக்குள் புதைந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் - மண்ணுக்குள் புதைந்தது எப்படி
கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் மண்ணுக்குள் புதைந்தது எப்படி?

நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `கல்கி கி.பி.2898’ திரைப்படத்தால் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கிராமம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட பண்டைய கால கோவில் தான் இதற்கு காரணம்.

நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் உள்ள அந்த கோவிலின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே இந்த கோவிலை காண வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான யூடியூபர்கள் இந்த பண்டைய கால கோயிலை பற்றி தங்களது யூடியூப் சேனல்களில் பதிவுகளை இடுகின்றனர். ஆந்திர மக்களும் வரிசையில் நின்று கோவிலை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

பிபிசி குழு அந்த பகுதிக்கு சென்ற போது, ​​யூடியூபர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் - மண்ணுக்குள் புதைந்தது எப்படி?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)