அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்த நாடுகளும் அதற்கான காரணங்களும் - முழு விளக்கம்
தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி 12 நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
டிரம்ப் கையெழுத்திட்ட பிரகடனம், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை பகுதியளவு கட்டுப்படுத்துகிறது.
இது தொடர்பாக டிரம்ப் பேசும்போது, "முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டால் இந்த பட்டியல் திருத்தப்படலாம்" என்றும் உலகம் முழுவதும் புதிய அச்சுறுத்தல்கள் உருவாகும்போது கூடுதல் நாடுகள் இதில் சேர்க்கப்படலாம் என்றும் அறிவித்தார்.
தடைக்கு காரணம் என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



