கோத்தர் பழங்குடியின பெண்களின் பாரம்பரிய மண் சுமக்கும் விழா - காணொளி

காணொளிக் குறிப்பு,
கோத்தர் பழங்குடியின பெண்களின் பாரம்பரிய மண் சுமக்கும் விழா - காணொளி

உதகையில் பாரம்பரிய உடை அணிந்து இசை கருவிகள் இசைத்தபடி, கோத்தர் பழங்குடியின பெண்கள் தலையில் மண் சுமந்து சென்ற காட்சி இது.

கோக்கால் கிராமத்தில் வசிக்கும் கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களது அய்யனூர், அமனூர் தெய்வங்களுக்காக மண்ணை சிவலிங்க வடிவில் செய்து அதை தலையில் சுமந்து சென்று படையல் படைக்கின்றனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சடங்கில் ஈடுபடுகின்றனர்.

சிவலிங்க வடிவத்தை பெரணி இலைகளைக் கொண்டு தலையில் வைத்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தங்களது கிராமம் வரை சுமந்து செல்கின்றனர்.

அதன்பின் அந்த மண்ணை வைத்து 3 நாட்களில் பானைகள் செய்து அதில் சமைத்து தங்களது குலதெய்ங்களுக்கு படையல் இட்டு கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு