‘என்ன கேள்வி கேட்கிறாய்?’ பெண் செய்தியாளரைத் தாக்கிய தாய்லாந்து அரசியல்வாதி
‘என்ன கேள்வி கேட்கிறாய்?’ பெண் செய்தியாளரைத் தாக்கிய தாய்லாந்து அரசியல்வாதி
தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் ராணுவத் தலைவருமான பிரவித் வோங்ஸ்வான் ஒரு செய்தியாளரைத் தாக்கிய காட்சி இது.
கடந்த வாரம் புதிய பிரதமர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது செய்தியாளரை பிரவித் தாக்கினார்.
செய்தியாளரை பிரவித்துக்கு நன்கு தெரியும் என்றும் அவர் மன்னிப்பு கோரிவிட்டதாகவும் அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எனினும், தாய் ஒளிபரப்புச் செய்தியாளர்கள் சங்கம் மற்றும் தாய்லாந்து செய்தி ஒளிபரப்பு கவுன்சில் பிரவித்தின் நடவடிக்கை எம்பி நடத்தை நெறிமுறைகளை மீறுகிறதா என விசாரிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



