உத்தர பிரதேசம்: 10 குழந்தைகளின் உயிரைப் பறித்த மருத்துவமனை தீ விபத்தில் என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு, (நவம்பர் 15) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்ததை ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சனிக்கிழமை அதிகாலை சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
"சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மட்டத்தில் முதற்கட்ட விசாரணை சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, விபத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
அங்கு என்ன நடந்தது? முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



