ஒடிஷா ரயில் விபத்து: சிகிச்சைக்காக தமிழ்நாடு நோக்கி வந்த வங்கதேசத்தவரும் உயிரிழப்பா?

காணொளிக் குறிப்பு, ஒடிஷா ரயில் விபத்து - வங்கதேசத்திலும் பதறும் மக்கள்
ஒடிஷா ரயில் விபத்து: சிகிச்சைக்காக தமிழ்நாடு நோக்கி வந்த வங்கதேசத்தவரும் உயிரிழப்பா?

ஒடிஷா ரயில் விபத்தில் வங்கதேசத்தவரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சிகிச்சைக்காக சென்னை, வேலூர், பெங்களூரு வந்த அவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் பதறுகின்றனர்.

விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் வங்கதேச பயணிகள் இருக்கக்கூடும் என்பதால் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை உயர் ஆணையத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

துணை உயர் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று காணாமல் போன வங்கதேசத்தவர்களை தேடி பாலசோருக்கு விரைந்துள்ளது.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: