படிக்கட்டு வழியே விநோதமான முறையில் காரை ஓட்டிய முதியவர் (காணொளி)

காணொளிக் குறிப்பு, படிக்கட்டுகள் இருக்கும் போது சாலைகள் எதற்கு? வினோதமான முறையில் காரை ஓட்டிய முதியவர்!
படிக்கட்டு வழியே விநோதமான முறையில் காரை ஓட்டிய முதியவர் (காணொளி)

இத்தாலி தலைநகர் ரோமில் 81 வயதான நபர் ஒருவர் Spanish Steps எனப்படும் படிக்கட்டுகளில் காரை ஓட்டிச்சென்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தான் வேலைக்கு சென்றுகொண்டிருந்ததாக கூறிய அவர் மது அருந்தியிருக்கவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த Spanish Steps இத்தாலியின் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். ஒரு கட்டத்தில் இவரது கார் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்ட நிலையில் அது கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு