துருக்கி அதிபருக்கு எதிராக மக்கள் - வரலாறு மாறுகிறதா?
துருக்கி அதிபருக்கு எதிராக மக்கள் - வரலாறு மாறுகிறதா?
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான அசாதாரண சூழ்நிலையை துருக்கி எதிர்கொண்டுள்ளது. இதனால், 1,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது?
புதன்கிழமை இஸ்தான்புல் மேயர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை என்று எக்ரெம் இமாமோக்லு கூறுகிறார். அடுத்த தேர்தலில் அதிபர் ரிசெப் தையிப் எர்துவானின் வலுவான போட்டியாளராக அவர் கருதப்படுகிறார்.
ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றாலும், அதிபர் எர்துவான் அவற்றைக் கண்டித்தார். எதிர்க்கட்சி "அமைதியைக் குலைத்து, மக்களைப் பிரிக்க" முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



