ராமேஸ்வரத்தில் பாலம் உடைந்து கடலுக்குள் கவிழ்ந்த வாகனம்

காணொளிக் குறிப்பு, ராமேஸ்வரத்தில் பாலம் உடைந்து வாகனம் விபத்து
ராமேஸ்வரத்தில் பாலம் உடைந்து கடலுக்குள் கவிழ்ந்த வாகனம்

ராமேஸ்வரத்தில் பாலம் ஒன்று திடீரென்று உடைந்ததில் அப்போது சென்றுக் கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இது நடந்தது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் பாலம் உடைந்து செங்குத்தாக கடலுக்குள் விழுந்தது.

வாகனத்தில் இருந்த இருவர் லேசான காயத்துடன் தப்பினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு